பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
ரஷியாவின் காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியானது. அங்கு உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
காயம் காரணமாக பிரேசில் அதிபர் பங்கேற்க மாட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநாட்டில் பங்கேற்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.