யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியில் 6 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
15 கிலோ 55 கிராம் எடை கொண்ட குறித்த போதைப்பொருட்கள் நேற்று பூநகரி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருட்கள் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்ட வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 17 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.