கண்டி, அனிவத்த பிரதேசத்தில் குடியிருப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஜீப் ரக வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குறித்த இரண்டு வாகனங்களும் பதிவு செய்யப்படாதவை என்பதுடன் அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த வாகனங்கள் சுங்க வரி செலுத்தாமல் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.