தெதுரு ஓய ஆற்றை அண்மித்ததாக பெருகியுள்ள அந்நிய மீன் வகையை அங்கிருந்து அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மீனினத்தினால் ஆற்றிலுள்ள ஏனைய மீன் வகைகளின் பெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ள போதிலும் அதனை மனித பாவனைக்க எடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜயன்ட் ஸ்னெக் ஹெட் எனப்படும் என அழைக்கப்படும் குறித்த அந்நிய மீன் வகை தெதுரு ஓய ஆற்றை அண்மித்திருக்கும் 3 மீன்பிடி பகுதிகளில் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நன்னீர் வாழ் அதிகார சபையின் அதிகாரிகள் உட்பட கடற்றொழில் சமூகத்தினரும் இணைந்து மீன் இனத்தை ஆற்றிலிருந்து அகற்றும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்கள் கெக்குலாவல பகுதியில் உணவுக்கு எடுக்கும் வகையில் சமைக்கப்பட்டதுடன் அவற்றை அதிகாரிகள் உட்கொண்டனர். குறித்த மீன் வகை மனித பாவனைக்கு உகந்தது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.