நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமை குறைவடைந்து வரும் நிலையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
உடலில் காயங்கள் இருப்பின் வெள்ளம் வடிந்தோடாத நிலையில் எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளும் இருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எலிகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்திருந்தால் உடலில் ஏற்ப்பட்டுள்ள காயங்கள் வழியாக எலிக்காய்ச்சலுக்கான கிருமி உடலில் பரவும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண் சிவத்தல், காய்ச்சல், வெளியேறும் சிறுநீரகத்தின் அளவு குறைவடைதல் , கடும் தலைவலி , உடல்வலி போன்ற நோய் அறிகுறிகள் எலிகாய்ச்சலினால் ஏற்படுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளின் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.