இனந்தெரியாத வைரஸ் நோயினால் அனுராதபுரம் மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நோய் தாக்கி இரண்டு நாட்களில் விலங்குகள் இறந்து விடுவதாக பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உளுக்குளம் பகுதியில் உள்ள சுமார் 20 கால்நடை பண்ணைகளில் இந்த நோய் பரவியுள்ளது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை என பண்ணை உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.