நேற்றைய தினம் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்று ஹங்வெல்ல அம்புல்கம பிரதேசத்தில் வைத்து இன்று (17) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை நான்கு மணியளவில் காரில் சென்ற இனங்காணப்படாத நபர்கள் சிலர் முச்சக்கரவண்டியில் இருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.