மலேசியாவில் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நூற்றுக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டிலுள்ள மத குழுவொன்றின் மீதும் இது தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மனித ஆட்கடத்தல் உட்பட சிறுவர் துஷ்பிரயோகங்களிலும் குறித்த குழுவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக மலேசிய பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொலிசார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் ஊடாக சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மத குழுவிடமிருந்து 400க்கும் அதிகமான சிறுவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாட்டிலுள்ள 20 சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் இந்த துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை தற்போது 171 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு ஊழியர்களும் உள்ளடங்குவதாக மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.