மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக நாடுகளுக்கான தூதரகங்கள் ஊடாக நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் அவதானம செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்தான ஆலோசனைகளை தூதரகங்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்துகொள்ள 0112 33 88 12 அல்லது 0117 71 11 94 என்ற இலக்கங்கள் ஊடாக கொன்சியுலர் பிரிவை நாட முடியுமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.