வடக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.