சிலாபம் – குருநாகல் வீதியின் முகுணுவடவன பகுதியில் இன்று (16) காலை வீதியில் விழுந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் விழுந்த பெண்ணை பிரதேசவாசிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் முகுணுவடவன பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் நெருங்கிய உறவினரும், பெண் விழுந்த தருணத்தில் காரில் பயணித்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.