உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் விருப்பங்களின்படி, பயண வழிகாட்டி இணையதளம், சிறந்த உணவகங்களில் சிறந்தது (BEST OF THE BEST RESTAURANTS) என்ற பெயரில் நடாத்திய கருத்துக்கணிப்பில், ‘எல்ல சில்’ உணவகம் உலகின் சிறந்த உணவகங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாகவும் சில் உணவகம் தெற்காசியாவின் இரண்டாவது சிறந்த உணவகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
உணவு , பானங்கள் மற்றும் கவனிப்பு சேவைகள் உள்ளிட்ட பல துறைகள், தங்கள் விருப்பத்திற்கு காரணம் என்று சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகளில் காணப்பட்டுள்ளது.