புத்தளம் பகுதி ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 4 மலேசிய ஆண்கள், 3 எத்தியோப்பிய ஆண்கள் மற்றும் ஒரு பெண், கென்யா பெண்ணொருவர் மற்றும் ஒரு சீன ஆண் ஒருவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 கணனிகள், 3 இணைய ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.