முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க உரையொன்றை நிகழ்த்தவுள்ள முதற் சந்தர்ப்பம் இதுவாகும். நாட்டின் சமகால அரசியல் போக்கு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் வெளிப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.