ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று (15) காலை 7 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த மீனகயா நகரங்களுக்கு இடையிலான ரயிலின் இயந்திரம் இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.
அத்துடன் , மற்ற மார்க்கத்தின் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.