வெட் வரி செலுத்த தவறிய சம்பவம் தொடர்பில் டபிள்யு.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய வருமான வரி திணைக்களத்தினால் இதற்கான வழக்கு தொடரப்பட்டிருந்தது. அரசிற்கு சொந்தமான 3.5 பில்லியன் ரூபா வெட் வரி பணத்தை செலுத்தாமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.