சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பாடசாலைகளை நாளை (14) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் வத்தளை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.