டுவன்டி டுவன்டி மகளிர் உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி நியுசிலாந்திடம் தோல்வியடைந்தது. இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்றது.
குறித்த இலக்கை 17.3 ஓவர்களில் நிறைவு செய்து நியுசிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்றது. குறித்த தொடரில் இலங்கை மகளிர் அணி பங்கேற்ற 4 லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
இதனால் தொடரிலிருந்து ஏற்கனவே இலங்கை அணி வெளியேறியுள்ள நிலையில், உலக கிண்ண கனவு தகர்ந்துள்ளது.