வலஸ்முல்ல – போவல பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கிளிநொச்சி மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 42 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 81 கிலோ 690 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.