மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடருக்கான இலங்கை அணியில் நடுத்தர துப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ இடம்பிடித்துள்ளார்.
32 வயதான பானுக ராஜபக்ஷ, 2023 ஜனவரி முதல் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடவில்லை.
அண்மையில் முடிவடைந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக ஒரு நடுநிலை வீரராக மட்டுமே இருந்தார்.
எனினும், அவர் மீதான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நம்பிக்கை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் அவர் இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை, இந்த தொடரக்கான இலங்கை அணியில் முன்னாள் தலைவர் தசூன் ஷானக்க இடம்பிடிக்கவில்லை.
அவரின் வெளியேற்றத்தால், இந்தியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமான 22 வயதான சீம்-பவுலிங் சகலதுறை நட்சத்திரம் சமிந்து விக்ரமசிங்க தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவுக்கும் இடமில்லை. வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர அணியில் இடம் பெறத் தவறிவிட்டார், ஆனால் அது காயம் காரணமாக, ஜூலை முதல் அவரை போட்டி கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைத்துள்ளது.