எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லையென ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதுடன் தேசியப்பட்டியல் வேட்பாளராக களமிறங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.