தற்கொலை நோக்கத்தோடு ரயில் பாதையில் உறங்கிக் கொண்டிருந்த இளம் தாய் மற்றும் மூன்று வயது மகளின் உயிரை ரயில் சாரதி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (10) காலை களனிவெலி ரயில் பாதையில் அவிசாவளை, ஹிங்குரல மற்றும் மிரிஸ்வத்த உப ரயில் நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
தாய் மற்றும் மகளின் உயிர் காப்பாற்றப்பட்ட போதிலும், இருவரும் ரயில் மோதியதில் லேசான காயம் அடைந்தனர்.
இதனையடுத்து 1990 சுவசெரிய நோயாளர் காவு வண்டி மூலம் இருவரும் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த ரயில் அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்ததாகவும், ஹிங்குரல உப ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்த வேண்டி இருந்ததால், வேகக் கட்டுப்பாட்டின் கீழ் ரயில் இயக்கப்பட்டதால் குறித்த உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.