முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவலுக்கு சொந்தமான இரு வங்கி கணக்குகளை தடை செய்து கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்துச் செல்லும் விசாரணைகளுக்கமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு சொந்தமான கொக்கல மற்றும் மத்துகமவிலுள்ள இரு வங்கி கணக்குகளை 3 மாதங்களுக்கு தடை விதிப்பது அவசியமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்தது.