பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை இலக்காக கொண்டு விற்பனை செய்வதற்கு தயார் நிலையிலிருந்து போதை மாத்திரைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பொரள்ளை பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 599,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றை கொண்டு செல்வதற்கென பயன்படுத்தவிருந்து லொறியொன்றையும் பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர். போதை மாத்திரைகளின் பெறுமதி 6 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் சிலாவத்துறை பகுதியில் வைத்து சுஜி என்பவரிடமிருந்து இந்த போதை மாத்திரைகளை பெற்றுக்கொண்டதாக சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.