பாராளுமன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தகுதியுடைய அனைத்து தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் சேவை நிலையத்தை அண்மித்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கையளிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிக்கபப்ட்டள்ள நபர்களைத் தவிர்த்து அரச உழியர்களும், மாகாண அரச சேவையின் அனைத்து அதிகாரிகளுக்கும் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் உள்ளது.