வட கொரியாவின் இராணுவம் இன்று (09) முதல் தென் கொரியாவுடன் இணைக்கப்பட்ட வீதிகள் மற்றும் ரயில் பாதை போக்குவரத்தினை முற்றிலுமாக துண்டித்துள்ளது.
தனது எல்லையில் உள்ள பகுதிகளின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்குடன் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடகொரிய அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் பல ஆண்டுகளாக மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.