இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் உப தலைவர் பாரத் அருள்சாமி தமிழ் முற்போக்கு கூட்டணியில் இன்று இணைந்துகொண்டார்.
கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கொழும்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவராக பதவி வகித்த பாரத் அருள்சாமி நேற்றைய தினம் குறித்த கட்சியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.