ஐ.சி.சி யின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கட் வீரருக்கான பரிந்துரையில் இலங்கை வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர். கமிந்து மென்டிஸ் மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகிய வீரர்கள் பரிந்துரைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் நியமிக்கப்படும் விசேட குழு ஊடாக மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகளின் பின்னர் மாதத்திற்கான சிறந்த வீரர் தெரிவு செய்யப்படுவார்.
இதற்கமைய இதுவரை தான் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் அரைச்சதங்களை குவித்துள்ள கமிந்து மென்;டிஸ் 13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார்.
இந்த விசேட திறமை வெளிப்பாடுகளுக்கமைய அவரது பெயர் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இதேவேளை நியுசிலாந்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கட்டுக்களை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய குறித்த போட்டிகளில் நாயகனாகவும் தெரிவானார்.