இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தான் சிறைக்கைதிகள் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
விசேட விமானம் ஊடாக அவர்கள் பாகிஸ்தானை சென்றடைந்தனர். இரு நாடுகளுக்குமிடையில் கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இணக்கப்பாடு எட்டுப்பட்டு 3 மாதங்களின் பின்னர் இவ்வாறு கைதிகள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எட்மிரல் ரவீந்த்ர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.