காஷா மீதான குண்டுத்தாக்குதல்களின் போது எஸ்பெஸ்டோஸ் எனும் சக்திவாய்ந்த கனிமப்பொருள் பயன்படுத்தப்படுவதாக அல் ஜஷீரா செய்தி வெளியிட்டுள்ளது. வான்வழித் தாக்குதல்களின் போது வெளியாகும் துகள்களால் காஷா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அவர்கள் சுவாசித்தால் அது புற்றுநோயை தாக்கத்தை உண்டாக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காஷா மீது இஸ்ரேல் தொடர் குண்டுமழை பொழிகிறது. எஸ்பெஸ்டோஸ் என்பது மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் ஒரு விடயமாகும்.
வான்வழித் தாக்குதல்களின் போது வெளியாகும் எஸ்பெஸ்டோஸ் அடங்கிய துகள்களை மக்கள் சுவாசிப்பதால், அவர்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இது காஷா முழுவதும் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.