தணமல்வில பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நாடக நடிகர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சஷி என அழைக்கப்படும் குறித்த நாடக நடிகரிடமிருந்து 10 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரதான சந்தேக நபருக்கு எதிராக தலைமன்னார் பிரதேசத்தில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் முறைகேடான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெறுகிறது.
குறித்த நபர் தன்னை விடுவித்துக் கொள்வதற்காக பொலிசாருக்கு 10 இலட்சம் 7பாவை இலஞ்சமாக வழங்குவதற்கும் முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை கைதான ஏனைய சந்தேக நபர்களிடமிருந்தும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.