கொழும்பு வாழைத்தோட்டம் டெக்னிகல் சந்தியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
32 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. மற்றுமொரு நபருடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதடன் அவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை வாழைத்தோட்ட பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.