உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்ததுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு இன்று விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது போன்ற ஒரு அவலம் இனி நடக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், நியாயமான, வெளிப்படையான விசாரணையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.