முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் ஆயுட்காப்புறுதிகள் பலவற்றை இடைநிறுத்தும் வகையில் வெளியிடப்பட்டிருந்த தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கமைய கொழும்ப மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை இதற்கு முன்னர் ஆராய்ந்த நீதிமன்றம் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் 16 வங்கி கணக்குகள் 5 ஆயுட்காப்புறுதிகளை இடைநிறுத்தி இன்றைய தினம் வரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கமைய ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த தடையை ஜனவரி மாத் 4ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டது.