ஆறு நாட்களாக காணாமல் போயிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரின் சடலம் மகாவலி ஆற்றில் கரையொதுங்கியுள்ளது. மகாவலி ஆற்றின் நாவலப்பிட்டி, தொரவாதெணி பாலத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி, திஸ்பனே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணாமல் போயிருந்த தமது தந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பிள்ளைகள் அடையாளம் கண்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.