மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் லெபனான் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தினை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
ஹஸ்புல்லாவின் புலனாய்வுத்துறை தலைமையகத்தினை இலக்குவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
விமான நிலையத்திற்கு அருகில் ஹஸ்புல்லாவின் புலனாய்வுத்துறை தலைமையகத்தினை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எவ்வாறாயினும் இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கருத்து வெளியிடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது