இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று (04) நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.