கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
சிறு தேயிலை உரிமையாளர்களை இலக்கு வைத்து செயற்படுத்தப்படும் டிஜிட்டல் விவசாய பரிமாற்ற திட்ட முன்னேற்றம் மற்றும் இலங்கையில் போஷாக்கின்மை நெருக்கடிக்கு எதிர்கொள்வதற்காக திட்டமிட்டுள்ள பாடசாலை உணவு வழங்கல் திட்டம் என்பன குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.
டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதி, கால்நடை வளர்ப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான ஒத்துழைப்பு குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கும் கேட்ஸ் மன்றத்திற்கும் இடையிலான கூட்டுச் செயற்பாடுகளை முறைப்படுத்துவது தொடர்பில் விரைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாட கேட்ஸ் மன்றத்தின் தலைவர் எதிர்பார்ப்பதாகவும் மன்றத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.