உலக மது ஒழிப்பு தினம் இன்றாகும். மதுபானம் காரணமாக உலகம் முழுவரும் வருடாந்தம் சுமார் 3 மில்லியனிற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் மதுபான பாவனையினால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதுடன் இதனால் நோயாளர்களாக மாறுபவர்களுக்கென வருடாந்தம் 237 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.
இந்நிலையில் நாட்டில் மதுபான பாவனையை குறைப்பதற்கு உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு மதுபான மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.