9வது மகளிர் உலக கிண்ண டுவன்டி டுவன்டி கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. டுபாயில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. போட்டியின் ஆரம்ப நாளான இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளும் ஸ்கொட்லாந்து மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகளும் போட்டிகளில் மோதவுள்ளன.
10 மகளிர் அணிகள் தொடரில் விளையாடவுள்ளன. இம்முறை தொடரில் இரு குழுக்களின் கீழ் அணிகள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன. இலங்கை மகளிர் அணி குழு ஏ யில் அங்கம் வகிக்கின்றது.
முதல் சுற்றில் 4 போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது. குழு ஏ யில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன.
இதுவரை இடம்பெற்ற உலக கிண்ண டுவன்டி டுவன்டி கிரிக்கட் தொடர்களில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 6 தடவைகள் கிண்ணத்தை வென்றுள்ளதுடன் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு மகளிர் அணிகள் தலா ஒரு தடவை கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.