எல்பிட்டிய பிரதேச சபைத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு 2024.10.14 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் அனைத்து பணிகளையும் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது. இதற்கமைய தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்து வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களுக்கான வாக்காளர் அட்டை எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை விநியோகிக்கப்படும்.
தகுதிபெற்ற தபால்மூல வாக்காளர்கள் 2024.10.14 வாக்களிக்க முடியும். இத்தினத்தில் வாக்களிக்காதவர்கள் தாம் சேவையாற்றும் மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் 2024.10.18 ஆம் திகதி வாக்களிக்க முடியும்.