புனேவில் உள்ள பாவ்தான் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் நடந்ததாக புனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஹெலிகொப்டர் டெல்லியை சேர்ந்த ஹெரிடேஜ் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான உறுதியான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.