சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (02) இடம்பெறவுள்ளது.
புதிய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பணிகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என அமைச்சர்கள் சபையின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.