இம் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் உள்நாட்டு எரிவாயுவின் விலையை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறந்த பங்கு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவத்தினால் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க முடிந்ததாக லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.
எனவே, ஒக்டோபர் 2024 மாதத்துக்கான தற்போதைய விலைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.