ஹப்புத்தளை பிடரத்மலை தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்கள் சிலர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் 7 பேர் ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குளவித் தாக்குதலினால் கூடுதல் பாதிப்புக்குள்ளான பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.