குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக பீ.எம்.டீ.நிலூசா பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் அவரது நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய நீதிமன்ற உத்தரவிற்கமைய விளக்கமறியலில் உள்ள நிலையில் குறித்த பதவி வெற்றிடமானது.
அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றி வருகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பீ.எம்.டீ.நிலூசா பாலசூரியவை எ குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக நியமிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இணங்கியுள்ளது.