தாய்லாந்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் சுற்றுலாச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகியுள்ளனர். விபத்தினையடுத்து பஸ் தீப்பற்றி எரிந்ததில் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்திலிருந்து 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் உயிர் தப்பியுள்ளனர். எனினும் மேலும் 22 பேர் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
தலைநகர் பெங்கொங் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீயினால் பஸ் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. அதிலிருந்து வெளியாகும் வெப்பம் காரணமாக பஸ்ஸின் உள்ளே நுழைவது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.