ஐனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்க் ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவான அனுர குமாரவிற்கு அமெரிக்க தூதுவர் இதன்போது தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இராஜதந்திர உறவுகள் உட்பட, சமூக பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் ஆர்வம் செலுத்தும் பொதுவான துறைகள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.