தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது அவர் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இருவருக்குமிடையில் சுமூக கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.