இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளார்
இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடகபதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது-
நீடித்து நிலைத்திருக்கும் இலங்கை அமெரிக்க உறவுகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை இன்று சந்திக்க முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கையின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், குடிமைபங்கேற்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் திறன்களை வலுப்படுத்தும் அதேவேளை வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களையும,; செழித்துவளரும் பொருளாதாரங்களையும் கட்டியெழுப்பும்,எங்களின் பகிரப்பட்ட இலக்குகள் குறித்து நான் வலியுறுத்தினேன்.
இலங்கையர்கள் தங்கள் சொந்த இலக்குகளையும் அபிலாசைகளையும் அடைவதற்காக அவர்களை வலுப்படுத்தும் எங்களின் உதவிகள் திட்டங்கள் குறித்தும் சுட்டிக்காட்டினேன்.
இலங்கை புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வேளையில் ஐக்கியம் நல்லாட்சி செழிப்பு மற்றும் மனித உரிமைகளிற்கு ஆதரவளிக்கும் வலுவான சகாவாக அமெரிக்கா விளங்கும்.